திராட்சை தரும் அற்புத நலம் பற்றி அறிவோமா? தினந்தோறும் திராட்சையை சாறாகவோ, சாதாரணமாகவோ சாப்பிட்டு வந்தால் குணமடையும் நோய்கள் இதோ...
புற்று நோய், இருதய நோயாளிகள் இனிப்பு சேர்க்காமல் திராட்சையை உடனுக்குடன் சாறாக மாற்றி அருந்தி வர வேண்டும். திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது?
காரப்பொருள் இரத்தத்திலுள்ள காரத்தன்மையை எதிர்கொண்டு சமனப்படுத்திவிடும். மக்னீசியம் திராட்சையின் மூலம் மக்னீசியம் கிடைத்துக் கொண்டே இருப்பதால் மாரடைப்பு என்ற அபாயம் முழுவதும் தடுக்கப்படுகிறது. நீர் திராட்சையில் தண்ணீர் அதிகம். எனவே உடலில் எந்த உறுப்பிலாவது கடினமான அடைப்போ , சேமிப்போ இருந்தால் அதைக் கரைத்து உடனே வெளியேற்றிவிடும். விலை குறைந்த இவ்வரிய பழம் எல்லோரது பட்ஜெட்டுக்கும் ஏற்றது தானே! தினம் தினம் இதை உணவாகக் கொண்டு இதன் மருத்துவ மகத்துவத்தைப் பெற்று நலம் பெருவோம். என்ன பழக்கடைக்குப் புறப்பட்டாச்சா!!!!
Disclaimer: இப்பகுதியில்
இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ
அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க
"தாருல்
ஸஃபா”
பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
|
|