புதினா புதினா ஈயெச்சக் கீரை, புதியன் மூலி, பொதினா எனப் பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் புதினாக் கீரையின் இலைகள் மருத்துவத்தில் அதிகம் இடம் பெறுகின்றது. செரியாமையால் உண்டாகும் சுரம்: புதினா இலையை நிழலில் உலர்த்தி பின்பு குடிநீர் தயாரித்து 50 மி.லி. வரை குடிக்க வேண்டும் . காமாலை நோய்: தேங்காய், புளி இல்லாமல் பாசிப் பயறு, புதினா சேர்த்துத் துவையல் செய்து சாப்பிடலாம். சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணிந்து நன்கு தூக்கம் வரும். மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்கப் புதினாக் குடிநீர் குடித்து வந்தால் குணமாகும். உலர்ந்த புதினா இலைகளைப் பொடியாக்கிப் பல் துலக்கலாம். பல மூலிகை டூத் பேஸ்டுகளில் சேர்க்கப் படுகிறது புதினா. செரிமானத்திற்குக் கடினமான உணவுகளான கிழங்கு, நெய், எண்ணெய்ப் பதார்த்தங்களைச் சாப்பிடும் போது புதினாத் துவையல் சேர்க்க மறவாதீர். பச்சைப் பட்டாணி பச்சை பட்டாணியை விரும்பும் வகையில் சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்குப் பல நன்மைகளைத் தரும்.
சுண்டைக்காய்: சுண்டைக்காயில் வைட்டமின் 'ஏ', இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன. உடலில் உஷ்ணத்தை உண்டாக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் . சுண்டை வற்றலை வறுத்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.
Disclaimer:
இப்பகுதியில் இடம் பெறும்
கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ
அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க
"தாருல்
ஸஃபா”
பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம். |
|