1. இறையினை இறைஞ்சுதல் இடர்களைப் போக்கும். 2. எண்ணம் போன்றே இறுவன் செயல்கள் 3. அன்னையின் அடிக்கீழ் அமைவது சுவனம் 4. தந்தையை மதித்தால் தனயன் மதிப்பான் 5. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே 6. தொல்லைகள் பொறுப்பதே துணியும் வீரம் 7. உணவிலும் உரையிலும் உவப்பது மிதமே 8. மெய்யிலும் உடையிலும் மேவுக தூய்மை 9. வயிறே மனிதனின் வைரியாகும் 10. பொறாமை என்பது பொல்லா நோயாம் 11. மடையனின் நாவு மரணத் திறவுகோல் 12. நாவின் அடியில் நல்லான் மறைந்துளான் 13. நல்லதோர் நண்பன் நாயனின் அருட்கொடை 14. அம்பினும் சொற்கள் ஆழ்ந்து பாயும். 15. சீனம் சென்றும் ஞானம் பெறுக. 16. மாசிலா அறிவு மனநோய் அருந்து. 17. பகைவரிடத்தும் பண்பினைக் காட்டு. 18. முயற்சியால் பெறுமுன் முற்றிலும் சிறந்தது. 19. வியர்வை உலருமுன் வழங்குக கூலி. 20.பசித்தோர்க் கூட்டுதல் பாரினில் பேரறம். 21. கொளுத்தும் கடைநாள் கொடையே குடையாம். 22. கடிய வன்முறை கடைநாள் இருளாம். 23. இசைவைப் பெறாதயல் இல்லம் நுழையேல் 24. தரையின் மீது தருக்குடன் நடவேல் 25. குரலைத் தாழ்த்திக் குணமுறப் பேசு. 26. தெரிந்ததைப் பேசு; தெளிவாய்ப் பேசு. 27. மெய்யால் இன்பம்; பொய்யால் அழிவு. 28. பணிவு உயர்த்தும்; பெருமை தாழ்த்தும் 29. நல்லதைச் செய்வோம்; அல்லதைத் தவிர்ப்போம். 30. நிகழ்ந்ததைக் கொண்டு நிகழ்வதை மதிப்பிடு. 31. மக்களின் தொண்டனே மக்களின் தலைவன் 32. கசப்பே விளைப்பினும் கழறுக உண்மை 33. குணத்திற் சிறந்தார் குவலயத் துயர்ந்தார் 34. எளிமையும் ஒழுக்கமும் ஏற்றம் சேர்க்கும். 35. பொதுநிதி கவர்வோர், புசிப்பது நெருப்பே. 36. முகமனில் காட்டும் முறுவலும் கொடையாம். 37. குணமுடையாளைக் கொள்க திருமணம் 38. இறையிலாச் செல்வம் இடர்களை விளைக்கும். 39. கையூட்டளிப்போர், பெறுவோர், நரகில். 40. நாணம் இன்றேல் நாடியதெலாம் செய் |
|